விருதுநகர் முழுவதும் பெறப்பட்ட ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Advertisement

விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த ஒருவர் வெளிநாடு செல்வதற்காக உடல் பரிசோதனை செய்தபோது ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் 2 வாரங்களுக்கு முன் சிவகாசி அரசு மருத்துவமனையில் அவர் ரத்த தானம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ரத்தம் யாருக்கு செலுத்தப்பட்டது என்ற பட்டியலை எடுத்து பார்த்தபோது, சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்தபோது அவர் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.


Advertisement

முதல்கட்ட விசாரணையில் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஒப்பந்த ஊழியர் செய்த தவறினால் தவறு நிகழ்ந்ததாக விருதுநகர் மாவட்ட மருத்துவ நலப்பணி இணை இயக்குநர் மனோகரன் கூறியுள்ளார். கடந்த 30-ம் தேதி வெளிநாடு செல்ல இருந்த நபர், ரத்த வங்கியில் சோதனை செய்தபோது உடல்நிலை சீராக இருப்பதாக அந்த ஊழியர் தெரிவித்ததால் தவறு நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால் மருத்துவமனை தொழில்நுட்ப வல்லுநரான ஒப்பந்த ஊழியர் வளர்மதி பணி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும் 2 ஒப்பந்த ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் மக்களிடம் இருந்து பெறப்பட்ட ரத்தத்தை மறுபரிசோதனை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட மருத்துவ பணி இணை இயக்குநர் மனோகரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement