மீண்டும் டி20 போட்டியில் தோனி சேர்ப்பு : ஓய்வு அறிவிப்பா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நியூஸிலாந்திற்கு எதிரான தொடரின் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.


Advertisement

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கான தொடர் ஜனவரி 12ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இதுவரையிலும் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதற்கான அறிவிப்பு தற்போது பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரின் இந்திய அணியில், விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்குமார், ஜஷ்பிரிட் பும்ரா, கலீல் அகமது, முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியே நியூஸிலாந்திற்கு எதிரான ஒரு நாள் போட்டிக்கான தொடரிலும் விளையாடும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.


Advertisement

             

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் பிறகு நியூஸிலாந்திற்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இந்தத் சுற்றுப்பயணத்தில் 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளன. இதில் டி20 போட்டிகள் தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹர்திக் பாண்ட்யா, குருனல் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், புவனேஷ்குமார், ஜஷ்பிரிட் பும்ரா, கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அணியில் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக தோனியின் சேர்ப்பு பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் தோனி சேர்க்கப்படவில்லை. ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடினார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நடந்து முடிந்த டி20 தொடரிலும் அவர் விளையாடவில்லை. இளம் வீரர்களின் அதிகரிப்பால் தோனி இனி டி20 போட்டிகளில் விளையாடாமல் போகலாம் எனக்கூறப்பட்டது. 


Advertisement

               

இந்நிலையில் நியூஸிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். இது தோனி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கு நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் டி20 விளையாடுவதால் இந்தத் தொடரோடு அவர் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவாரோ? எனவும் கருதப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement