கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு ஜிஎஸ்டி குறைகிறது..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு ஜிஎஸ்டியை குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.


Advertisement

நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்தாண்டு முதல் அமலுக்கு வந்தது. ஜிஎஸ்டியை பொறுத்தவரை 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகிறது. சமீபத்தில் பேசிய பேசிய பிரதமர் மோடி ஜிஎஸ்டி வரி விதிப்பில் 99 சதவீதப் பொருட்கள் 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைவான வரிவிதிப்பிற்கு கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார். நாட்டு மக்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படும் எனக் கூறினார். அதன்படி அண்மையில் நடைபெற்ற 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்கள் மீதான வரியை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதில் தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.


Advertisement

இந்நிலையில் கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு ஜிஎஸ்டியைக் குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது. கட்டப்பட்டு வரும் வீடுகளுக்கு இப்போது 12 சதவிகித ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், அதை 5 சதவிகிதமாக குறைக்க திட்டம் இருப்பதாக டெல்லியில் மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே, கட்டி முடிக்கப்பட்டு சான்றிதழ் பெற்ற வீடுகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு உள்ள நிலையில், கட்டுமானத் துறை வளர்ச்சியை அதிகரிக்க ஊக்கம் அளிக்க அரசு பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement