வரி வசூலிப்பதில் செலுத்தும் அக்கறையை நடுத்தர மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் மீதும் செலுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் காணொலியில் பேசிய பாஜக நிர்வாகி ஒருவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தென்சென்னை, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மைய பொறுப்பாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்து கட்சியினருக்கு அறிவுரைகளை அவர் வழங்கினார்.
சென்னை தியாகராய நகரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அக்கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது புதுச்சேரி பாஜகவைச் சேர்ந்த நிர்மல்குமார் ஜெயின் என்பவர் எழுந்து, அரசு மக்களிடம் வரியை வசூல் செய்வதிலேயே கவனம் செலுத்துவதாகவும், வரியை வசூலிப்பதில் காட்டும் அக்கறையை, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கட்சி தொண்டர்கள் நிம்மதியாக இருக்கவும் அக்கறை காட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, நடுத்தர மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார். இக்கேள்வியை எழுப்பிய நிர்மல்குமாரை கட்சி நிர்வாகிகள் தேடியதாகவும், அப்போது அவர் இல்லை என்பதால், அவர் யார் என விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
நீடிக்கும் தொகுதிப் பங்கீடு இழுபறி... விசிகவுக்கு தனிச் சின்னமா? திமுக சின்னமா?
பொதுச் சின்னத்தில் போட்டியிடுவதால் சிறு கட்சிகளுக்கு ஏற்படும் சாதக பாதகம் என்ன? ஓர் அலசல்
'கோவாக்சின் 81% செயல்திறன் கொண்டது..' ஆய்வு முடிவுகளை வெளியிட்ட பாரத் பயோடெக்
பெட்ரோல், டீசல் வரியை லிட்டருக்கு ரூ. 8.50 வரை தாராளாமாக குறைக்கலாம்: நிபுணர்கள் கருத்து
அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல் இன்று தொடக்கம்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?