போதை பொருள் வைத்திருந்த வழக்கில் மலையாள நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் அஸ்வதி பாபு. கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கி, சினிமா மற்றும் டி.வி சீரியல்களில் நடித்துவருகிறார். இவரது வீட்டில் போதை பொருள் இருப்பதாக திற்காக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் வீட்டுக்குச் சென்று நேற்று சோதனை செய்தனர்.
அப்போது அங்கு எம்டிஎம்ஏ என்ற போதை பொருள் வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட் டார். அவர் கார் டிரைவர் பினோய் ஆபிரகாமும் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து இங்கு வைத்து அவர் விற்று வந்தது தெரியவந்தது. இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதை பொருள் வழக்கில் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்