அமெரிக்காவில் நடுவானில் பாலியல் தொல்லை: தமிழக இளைஞருக்கு 9 வருட சிறை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடுவானில், விமானத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த தமிழக இளைஞருக்கு அமெரிக்க நீதிமன்றம் 9 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.


Advertisement

தமிழகத்தைச் சேர்ந்தவர் பிரபு ராமமூர்த்தி. வயது 35. இவர் கடந்த 2015 ஆண்டு முதல் அமெரிக்காவில் வசித்துவருகிறார். இவர், கடந்த ஜனவரி 3 ஆம் தேதி லாஸ் வேகாஸில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு ஸ்பிரிட் என்ற தனியார் விமானத்தில் சென்றுகொண்டிருந்தார்.  அருகில் அவர் மனைவி இருந்தார். மறுபுறம் இன்னொரு இளம் பெண் இருந்தார். இரவு நேரம் என்பதால் பக்கத்தில் இருந்த பெண் தூங்கிவிட்டார்.


Advertisement

திடீரென்று அவர் உடலில் ஏதோ ஊர்வது போல இருந்தது. கண் விழித்து பார்த்தால், அவரது ஆடை அலங்கோலமாக இருந்தது. ராமமூர்த்தி அவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அலறி கத்திய அந்த இளம் பெண், விமான பணிப்பெண்களிடம் இதுபற்றி புகார் கூறினார். அவர்கள் விமான நிலைய போலீசில் தெரிவித்தனர். பின்னர் ராமமூர்த்தியை கைது செய்து, போலீசார் விசாரித்தனர். இது தொடர்பான வழக்கு டெட்ராய்ட் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அவர் பாலியல் தொல்லைக் கொடுத்ததற்கு போதுமான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து தண்டனை உறுதி செய்யப்பட்டது.


Advertisement

இதையடுத்து விசாரணை நீதிமன்ற நீதிபதி டெர்ரன்ஸ் பெர்க் அவருக்கு 9 வருட சிறைத்தண்டனை விதித்து நேற்று தீர்ப்புக் கூறினார். 

சமீப காலமாக, இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் பாலியல் தொல்லை காரணமாக தண்டனை அனுபவிப்பது அதிகரித்து வருகிறது. 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement