பிரான்ஸில் கிறிஸ்துமஸ் சந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற நபரை பாதுகாப்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பிரான்ஸின் ஸ்ட்ராஸ்பர்க் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் சந்தையில், பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான மக்கள் குவிந்திருந்தனர். அந்நாட்டின் நேரப்படி இரவு 8 மணி அளவில் சந்தைக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த பாதுகாப்புப் படையினரும், காவல்துறையினரும், பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து நிகழ்விடத்தில் இருந்து தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத நபரை பிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே கிறிஸ்துமஸ் பண்டிகையை சீர்குலைக்கும் நோக்கில் பயங்கரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் வலுத்துள்ளது. இதனால் பிரான்ஸ் முழுவதும் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடந்த சம்பவத்துக்குப் பின், பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது அந்தப் பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி, அடையாளம் தெரியாத நபர் நடத்தியிருக்கும் இந்தத் தாக்குதல் சம்பவத்தால், காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே இந்தச் சம்பவத்துக்கு எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், ஐஎஸ் பயங்கரவாதிகள் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வலைத்தளங்களில் காணொளி வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், பயங்ரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்