வைர வியாபாரி மர்ம மரணம்: பிரபல டிவி நடிகை கைது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வைர வியாபாரி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல இந்தி டிவி சீரியல் நடிகை உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

மும்பை காட்கோபர் பந்த் நகரை சேர்ந்தவர், பிரபல வைர வியாபாரி ராஜேஸ்வர் உதானி. இவரது அலுவலகம் விக்ரோலியில் இருக்கிறது. கடந்த மாதம் 28 ஆம் தேதி அலுவலகத்தில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். ராஜேஸ்வரின் டிரைவரிடம் விசாரித்தபோது, தன்னை பண்ட் நகர் மார்க்கெட் அருகே இறக்கி விடும்படி அவர் சொன்னதாகவும் அங்கிருந்து வேறொரு காரில் அவர் சென்றதாகவும் தெரிவித்தார்.


Advertisement

இதற்கிடையே பன்வெல் அருகே அணைக்கட்டு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார், பயங்கர ஆயுதங்களால் கொல்லப்பட்டு கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மாயமான வைர வியாபாரி ராஜேஸ்வர் என்பது பிறகு தெரியவந்தது.

அவரது செல்போன் நம்பரை கொண்டு விசாரணை நடத்திய போலீசார், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததை கண்டுபிடித்தனர். சந்தேகத்தின் பேரில் சில பெண்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் மகாராஷ்ட்ரா அமைச்சர் பிரகாஷ் மேத்தாவின் முன்னாள் உதவியாளர் சச்சின் பவார், டிவி நடிகையும் மாடலுமான டிவோலீனா பட்டாச்சார்ஜி உட்பட 3 பேருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களை அழைத்து வந்து, 


Advertisement


காட்கோபர் போலீஸ் நிலையத்தில் அவர்களிடம் தனித்தனியாக மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை கைது செய் தனர். நடிகை டிவோலினா ’சாத் நிபானா சாதியா’ உட்பட பல்வேறு டிவி தொடர்களில் நடித்து பிரபலமானவர். இந்த கொலையில் இவர் பங்கு என்ன என்பது போன்ற விவரங்களை போலீசார் இப்போது தெரிவிக்க மறுத்துவிட்டனர். மேலும் சில நடிகைகளுக்கு இந்த கொலையில் தொடர் பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.  

loading...

Advertisement

Advertisement

Advertisement