“பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இல்லை” - தஞ்சை விவசாயிகள் கவலை 

-No-sugarcane-for-Pongal---rue-farmers-in-Thanjavur-after-Cyclone-Gaja-razes-crops

‘கஜா’ புயலினால் வரும் 2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இருக்காது என தஞ்சை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 


Advertisement

‘கஜா’ புயலால் நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, கடலூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகின. ஏராளமான பயிர்களும், வீடுகளும், பொருட்களும் சேதம் அடைந்தன. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ‘கஜா’ புயலினால் வரும் 2019 ஆம் ஆண்டு பொங்கலுக்கு கரும்பு ஏற்றுமதி இருக்காது என தஞ்சை விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


Advertisement

இதுகுறித்து வலமர்கோட்டை விவசாயி மாரி கூறுகையில், கரும்பு நன்கு வளர்ந்திருந்ததாகவும் அறுவடை சமயத்தில் புயல் வந்து எங்கள் வாழ்வாதாரத்தை சீரழித்து விட்டது எனவும் தெரிவித்தார். மேலும், மழை மண்களை அடித்து சென்று விட்டதால் விளைந்த கரும்புகள் அனைத்து அடியோடு சாய்ந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

துரை ராசு என்ற மற்றொரு விவசாயி கூறுகையில், இன்னும் சில நாட்களில் அறுவடை செய்து சர்க்கரை ஆலைக்கும் சந்தைக்கும் கரும்புகள் செல்ல இருந்த நிலையில் மழை வந்து பாழாக்கி விட்டதாக தெரிவித்தார். 1000 சர்க்கரை ஆலைகளுக்கு ஒரு லட்சம் கரும்புகள் அனுப்ப வேண்டும். ஆனால் தற்போது அனுப்ப முடியாத நிலை இருப்பதால் இந்தப் பொங்களுக்கு கரும்பு ஏற்றுமதி இருக்காது என தனது வருத்தத்தை தெரிவித்தார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement