[X] Close >

நிஜத்தில், ஒரு ஜங்கிள் புக்: குரங்குகளோடு வாழ்ந்த சிறுமி மீட்பு

Girl-found-in-Katarniaghat-forests--with-habits-similar-to-that-of-animals

குரங்குகளோடு வாழ்ந்து வந்த எட்டு வயது சிறுமியை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ’த ஜங்கிள் புக்’ படத்தில் விலங்குகளோடு வாழ்ந்த மோக்லி என்ற கேரக்டரைப் போல நிஜ சம்பவம் இது என்பதால் பொதுமக்கள் அந்த சிறுமியை ஆச்சரியமாகப் பார்த்து வருகின்றனர்.


Advertisement

உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ளது கட்டார்னியாகட் வனவிலங்கு சரணாலயம். இங்கு சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் யாதவ் என்பவர் வழக்கம் போல ரோந்து சென்றுகொண்டிருந்தார் இரண்டு மாதங்களுக்கு முன்பு. அப்போது சுமார் எட்டு வயது சிறுமி ஒருவர், குரங்குகளோடு சென்றுகொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் குரங்கு கூட்டத்திலிருந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்.

அந்தச் சிறுமி, மொழி தெரியாமல் பேசவும் தெரியாமல் கொடூரமாக நடந்துக் கொள்வதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது சிகிச்சைக்கு பின் சற்று குணமடைந்து வருவதாகவும், ஆனால் மனிதர்களை கண்டு பயப்படுவதாகவும், உணவுகளை கையால் எடுத்து உண்ணாமல் நேரடியாக வாயால் உண்பதாகவும் மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.


Advertisement

சிறுமி விலங்குகளை போல் இரண்டு கை மற்றும் கால்களைச் சேர்த்து மண்டிபோட்டு நடப்பதாக கூறிய மருத்துவர்கள், தற்போது கால்களால் நடக்க பயிற்சி வழங்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அவர் குணமடைவார் எனவும் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர்.

சிறுமியை மீட்ட சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் யாதவ் கூறும்போது, அந்த சிறுமியை மீட்க முயன்ற போது குரங்குகள் தாக்க முயன்றதாகக் கூறினார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close