ஜப்பானில் பெண்கள் மீது கொண்ட வெறுப்பால், 3டி பொம்மையை இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட விநோதம் அரங்கேறியுள்ளது.
டோக்கியோவைச் சேர்ந்த அகிஷிகோ கொண்டோ என்ற 35 வயது இளைஞர், வேலைபார்த்த இடத்தில் பெண்களால் பல பிரச்னைகளை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பெண்கள் மீது வெறுப்பு கொண்ட அவர், பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டால், பிரச்னைகளே வாழ்க்கையாகும் என்று அச்சமடைந்துள்ளார். இதையடுத்து, ஹட்சுனே மிகு என்ற கற்பனை கதாபாத்திரத்தின் முப்பரிமாண பொம்மையை உருவாக்கி வாங்கிய அகிஷிகோ, அந்த பொம்மையையே திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் எதிர்ப்பை மீறி, பொம்மைக்கு மணப்பெண் அலங்காரம் செய்து அதன் விரலில் மோதிரம் அணிவித்து அகிஷிகோ திருமணம் செய்துகொண்டார்.
ஜப்பான் டோக்கியோவில் உள்ள டவுன் ஹாலில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் 40க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும், மிகுந்த பொருட்செலவில் இந்தத் திருமணம் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. திருமணம் குறித்து பேசிய அகிஷிகோ கொண்டோ, நான் திருமணம் செய்துகொண்டுள்ள ஹட்சுனே மிகுவிற்கு வயதாகாது. என் மனம் நோகும்படி நடந்து கொள்ளாது. இதையெல்லாம் நான் பெண்ணிடம் எதிர்பார்க்க முடியாது. அது நடக்காத காரியமும் கூட. நாம் அனைத்து விதமான காதலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்தப் பொம்மை பாடகி ஹட்சுன் மிகுவின் சாயலில் தயார் செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம் தெரிவித்த அகிஷிகோ கொண்டோ, நான் கவலையாக இருக்கும் போது ஹட்சுன் மிகுவின் பாடல்களை அதிகம் கேட்பேன். அது என் மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அதனால் தான் அதையே திருமணம் செய்துகொண்டேன் என்று தெரிவித்தார்.
சராசரி திருமண நிகழ்வு போன்றே கேக்குகள், பரிசு பொருட்கள், மோதிரம் போன்ற அனைத்து விஷயங்களும் இந்தத் திருமணத்திலும் இடம் பெற்றன. இந்தத் திருமணத்தில் மணமகனின் குடும்பத்தினர் யாருமே கலந்துகொள்ளவில்லை.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?