பரோலில் வந்த பேரறிவாளனுடன் நடிகர் ரஜினிகாந்த் பேசியதன் பின்னணி குறித்து இயக்குநர் அமீர் புதிய தலைமுறையிடம் கூறியுள்ளார்.
சென்னை விமானநிலையத்தில் நேற்று நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள், 7 பேர் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எந்த 7 பேர்? என்று ரஜினி பதில் அளித்தார். எந்த 7 பேர்? என்று ரஜினி கூறிய பதில் குறித்து விமர்சனங்கள் எழுந்தது. தமிழக அரசியலில் களமிறங்கவுள்ள ரஜினிக்கு 7 பேர் விடுதலை குறித்து தெரியவில்லை என அரசியல் கட்சிகள் விமர்சித்தனர்.
இந்நிலையில், 7 பேர் விடுதலை குறித்த தன்னுடைய நிலைப்பாட்டத்தை தெரிவித்த ரஜினிகாந்த், பேரறிவாளன் பரோலில் வந்த போது அவருடன் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் பேரறிவாளன் ஒரு மாதம் பரோலில் தனது வீட்டிற்கு சென்றார். ஆனால், ரஜினிகாந்த் பேரறிவாளனுடன் பேசியது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் ரஜினிகாந்த், பேரறிவாளனுடன் பேசியதற்கு நான் சாட்சியாக உள்ளேன் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார். இந்த இருவரின் உரையாடல் குறித்த பின்னணியை அமீர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். “கடந்த முறை பேரறிவாளன் பரோலில் வந்த போது நானும், மற்றொரு இயக்குநரும் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தோம். பேரறிவாளனை பார்த்துவிட்டு திரும்பி சென்று கொண்டிருந்தபோது, அறிவு எனக்கு போன் செய்தார். ரஜினியுடன் இதுகுறித்து கொஞ்சம் வெளியில் பேச சொல்லணும் என்று கூறினார்.
அப்போது, ரஜினி ‘காலா’ படப்பிடிப்பில் இருந்தார். அங்கு படப்பிடிப்பில் இருந்த சமுத்திரகனிக்கு போன் செய்து தகவலை சொன்னேன். அவர் ரஜினியிடம் பேசிவிட்டு சொல்வதாக சொன்னார். பின்னர், ரஜினி பேரறிவாளனிடம் பேசுவாதாக கூறினார் என்று சமுத்திரகனி சொன்னார். நானும் அறிவு தொலைபேசி எண்ணை அனுப்பினோம். பின்னர், அரைமணி நேரம் கழித்து என்னை தொடர்பு கொண்ட அறிவு, ரஜினி பேரறிவாளனிடம் பேசிவிட்டார் என்று தெரிவித்தார். அதோடு, இந்த விவகாரம் குறித்து பேசுவதாக ரஜினி கூறியுள்ளார் என்றும் அறிவு சொன்னார். இது நடந்தது உண்மை. ரஜினி பேசியதற்கு நானே சாட்சி. ஆனால், அதன்பிறகு அது குறித்து ரஜினி பேசினாரா என்பது தெரியவில்லை. 7 பேரை விடுவிக்க வேண்டும் என்று கூறியதை வரவேற்கிறேன்” என்று கூறினார் அமீர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?