“ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு.. என்று நான் சொன்னால் நல்லா இருக்குமா?” - ரஜினி 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பொறுப்பான பதவியில் இருக்கும் அமைச்சர்கள் யாரையும் காயப்படுத்தாமல் கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.


Advertisement

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பாக நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நேற்றைய பேட்டியின் போது பேசிய ‘7 பேர் விடுதலை, பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணி’ உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்தார். அப்போது, சர்கார் பட சர்ச்சை குறித்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.

ரஜினி அளித்த பதில்கள்:-


Advertisement

முன்னாள் முதல்வர் இறந்தபின்னர் நடிகர்களுக்கு குளிர்விட்டு போய்விட்டது என்று அமைச்சர் கூறியுள்ளாரே?

அவர் நல்ல பதவியில் இருக்கிறார். பேசும் போது யாரையும் காயப்படுத்தாமல் கருத்துக்களை சொல்ல வேண்டும். அதேயே நான் திருப்பி ஜெயலலிதா இறந்தபின் அமைச்சர்களுக்கு என்று சொன்னால் நல்லா இருக்குமா?. பதவிக்கும் மரியாதை கொடுத்து பேசினால் நன்றாக இருக்கும். 

Read Also -> ரஜினி எல்லாவற்றையும் தெரிந்திருக்க வேண்டுமா ? ஆதரவும் எதிர்ப்பும்


Advertisement

     

அதிமுகவினர் பேனர்களை கிழித்தது, சென்சார் செய்த படம் மீண்டும் சென்சார் செய்யப்பட்டது?

அதிமுகவினரின் செயல்பாடுகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். வன்முறை எந்த வடிவத்தில் வந்தாலும் கண்டிக்கத்தக்கதே. மாற்றுக் கருத்து இருந்தால் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். எடுத்த எடுப்பிலேயே திரையரங்கள் மீது தாக்குதல் நடத்துவது, பேனர்களை கிழிப்பது, படங்களை நிறுத்துவது என்பது சரியானது அல்ல. 

மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பது பற்றி?

மக்களுக்கு இலவசங்கள் கொடுப்பது நூறு சதவீதம் தேவை. அது யாருக்கு, என்ன, எதுக்கு கொடுக்கிறோம் என்பதும் முக்கியம். வாக்குகளை மட்டும் மனதில் வைத்து இலவசங்கள் அளித்தால் அது சரியல்லை. 

ஒரு தலைவரைப்பற்றி தவறாக பேசினால் இப்படிதான் தொண்டர்கள் நடப்பார்கள் என முதல்வர் பேசியது குறித்து?

சினிமாகாரர்களுக்கு கூட எதை சொல்ல வேண்டும், எதனை சொல்லக் கூடாது என்ற அறிவு வேண்டும். சென்சிட்டிவான விஷயங்கள் தொடக்கூடாது. நாங்களும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். வருமான வரி கட்டுகிறோம். அதுகுறித்து ஏன் இவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். 

Read Also -> பாஜகவே பலசாலி - ரஜினிகாந்த் சூசகம்  

 

loading...

Advertisement

Advertisement

Advertisement