விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்தப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்தது. அடுத்து  ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தின் இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்திலும், இயக்குநர் ராஜேஷ் இயக்கும் புதிய படத்திலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். 


Advertisement

இந்தப் படம் வழக்கமான காமெடி கலந்த திரைக்கதையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இப்படத்திற்கு ‘ஜித்து ஜில்லாடி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்தி பரவியது. விஜய்யின் ‘தெறி’ படத்தில் வெளியான பாடல் வரி என்பதால் அதனை விரும்பி சிவகார்த்திகேயன் தேர்வு செய்துள்ளார் என்றனர். ஆனால் இப்படத்தின் இயக்குநர் ராஜேஷ், “படத்தின் தலைப்பு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் தனது அடுத்தப்படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சிவகார்த்திகேயன் இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, ‘செக்கச்சிவந்த வானம்’ திரைப்படத்தை தயாரித்தை லைகா நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ரஜினியின்  ‘2.0’ திரைப்படத்தையும் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.


Advertisement

அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்றாலும் விக்னேஷ் சிவனுடன் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்தால் அந்தக் கூட்டணி சிறப்பானதாக இருக்குமென அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement