[X] Close >

சர்கார் விவகாரம் டிக் டாக் செயலியில் விஜய் ரசிகர்களின் 'அட்ராசிட்டி'

Sarkar-issue--Vijay-fans-atrocity-in-Tik-tok

போதும்டா சாமி "சர்கார்" படத்த இனிமேல் தியேட்டரில் நிம்மதியா பார்க்கலாம் என்று சாமானிய திரை ரசிகன் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர்கள் டிக் டாக் செயலியல் பல சீரியஸான விஷயங்களை செய்து வருகின்றனர். இந்த விஷயங்களை செய்வதன் மூலம் சர்காருக்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவுக்கு பதில் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். ஆனால், இவர்கள் எதிர்ப்பால் உடைுபடுவது அரசு கொடுத்த மிக்ஸி, லேப் டாம் மற்றும் கிரைண்டர்கள்தான்.


Advertisement

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘சர்கார்’. கதை திருட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளை தாண்டி படம் தீபாவளியன்று வெளியானது. இதனையடுத்து படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை விமர்சிப்பது உள்ளிட்ட பல்வேறு சர்ச்சை காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அதிமுகவினர் எதிர்ப்பும் போராட்டமும் நடத்தினர். அத்துடன் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இயற்பெயர் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிமுகவினர் குற்றம்சாட்டினர்.


Advertisement

இந்த காரணத்தை முன்வைத்து, தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்த விஜய் பேனர்கள் கிழிக்கப்பட்டன. இதனால் ஒரு பரபரப்பான சூழ்நிலையே உருவானது. தமிழக அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய காட்சிகளை படக்குழு நீக்க வேண்டும் என வலியுறுத்தினர். இல்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து யோசிப்போம் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு சம்மதம் தெரிவித்தது. அதன்படி ’சர்கார்’ திரைப்படத்தில் இருந்து மிக்ஸி, க்ரைண்டர், ஃபேன் ஆகியவற்றை தூக்கி நெருப்பில் எரியும் காட்சி, மற்றும் வரலட்சுமி கதாபாத்திரத்தின் பெயர் கோமளவல்லி என்பதை ஆடியோ கட் செய்யவும் படக்குழு ஒப்புதல் தெரிவித்தது. தற்போது திரையிடப்படும் காட்சிகளில் இந்த காட்சிகள் இருக்காது.


Advertisement

இந்நிலையில் விஜய் ரசிகர்களோ ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்றிருந்த காட்சிக்கு ஆதரவாக தங்களது வீடுகளில் உள்ள தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச பொருட்களை எரியும் தீயில் போட்டு கொளுத்தி வருகின்றனர். தமிழக அரசால் வழங்கப்பட்ட இலவச மிக்ஸி, கிரைண்டர், லேட்பாட் உள்ளிட்ட பொருட்களை தீயில் எரிவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி இலவச பொருட்களை எரியும்போது கூட சிலர் சற்று உஷாராகவே எரிகின்றனர். அதாவது வீடியோ எடுப்பதற்காக மட்டுமே எரிவது போல பதம் பார்த்து எரிகின்றனர். தங்களின் இலவச பொருட்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் அவர்களின் மனதில் இருப்பது வீடியோக்களில் தெளிவாக தெரிகிறது.  சிலரோ உண்மையான ஆத்திரத்தில் எரிவது போல தீயில் எரிகின்றனர். ஒருவர்  தன்னுடைய இலவச லேப்டாப்பை அருகில் இருக்கும் தரையில் அடித்து அதனை நொறுக்கிறார். இதனால் இபோன்ற வீடியோக்கள் தற்போது டிக் டாக் ஆப்பில் அதிகம் காணப்படுகின்றன.

இதனிடையே ஒருசில மீம்ஸ்களும் சமூக வலைத்தளங்களில் பறக்கின்றன. அதாவது விஜய் ரசிகர்களின் அம்மாக்கள், “வீடுகளில் இருப்பது விலை கொடுத்து வாங்கிய மிக்ஸிடா அதனையும் தூக்கி வீசிறாதடா” என பரிதாபமாக சொல்வது போன்றும் மீம்ஸ்களும் வெளியாகியுள்ளன.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close