இந்திய குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் அதற்கான காரணத்தை தெரிவிக்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளன.
வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களால் இந்தியர்கள் பலர் வெளிநாடுகளில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு பல ஆண்டுகளாக தங்கும்பட்சத்தில் அவர்களுக்கு அந்த நாட்டின் குடியுரிமை கிடைத்துவிடுகிறது. அவ்வாறு வெளிநாடு செல்லும் இந்தியர்கள் தங்களின் இந்திய குடியுரிமையை கைவிட்டுவிடுகின்றனர்.
Read Also -> கட்டாய விடுப்பை எதிர்த்து அலோக் வர்மா வழக்கு ! 13 அதிகாரிகள் பணியிட மாற்றம்
இந்நிலையில் இந்திய குடியுரிமையை கைவிடும் இந்தியர்கள் அதற்கான காரணத்தை தெரிவிக்கும் வகையில் இந்திய குடியுரிமை சட்ட விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது என்ன காரணத்திற்காக இந்திய குடியுரிமையை கைவிடுகிறீர்கள்..? உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் வெளிநாட்டு குடியுரிமை பெறுவதற்கான காரணத்தை தெரிவிக்குமாறும் புதிய விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ன.
Read Also -> முல்லைப் பெரியாறில் புதிய அணையா ? ஆய்வு நடத்த கேரளாவுக்கு அனுமதி..!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவு அவர்களின் வெளிநாட்டு குடியுரிமை தடுப்பதற்காக அல்ல என்றும், என்ன காரணத்திற்காக அவர்கள் இந்திய குடியுரிமையை தவிர்க்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளத்தான் என்றும் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றார் ஜோ பைடன்
அமெரிக்க துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்
வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்திவைக்க தயார்: விவசாயிகளிடம் மத்திய அரசு உறுதி
பவுலர்களுக்கு கெட் அவுட்.. 7 பேரை விடுவித்தது மும்பை இந்தியன்ஸ்!
’’எந்த அதிபரும் பெறாத ஆதரவைப் பெற்றிருந்தேன்’’ : அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய ட்ரம்ப்