நடிகர் ராணாவின் அப்பாவும் பிரபல தயாரிப்பாளருமான சுரேஷ் பாபு ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சுரேஷ் பாபு. இவர் பிரபல தயாரிப்பாளர் டி.ராமநாயுடுவின் மகன். தெலுங்கு ஹீரோ வெங்கடேஷின் அண்ணன். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் பல்வேறு ஹிட் படங்களை தயாரித்துள்ள இவரது மகன் ’பாகுபாலி’ ராணா.
சுரேஷ் பாபு, தனது சொகுசு காரில் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பி கொண்டிருந்தார். அப்போது கர்கானா என்ற பகுதியில் உள்ள இம்பீரியல் கார்டன் அருகே வந்தபோது, டூவீலர் ஒன்றின் மீது கார் மோதியது. இதில், டூவீலரில் சென்றுகொண்டிருந்த சதீஷ் சந்திரா (35), நீலம் துர்காதேவி (30), அவர்கள் குழந்தை சித்திஷ் (3) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து உடனடியாக போலீசுக்கும் ஆம்புலன்ஸூக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவை போலீஸ் விசாரணைக்கு வருமாறு கூறியுள்ளனர்.
Loading More post
தொடர் விடுமுறை: கோயம்பேட்டில் குவிந்த மக்கள்.. போதிய பேருந்து வசதியில்லாமல் அவதி!
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் லாலு பிரசாத் அனுமதி
திட்டமிட்டப்படி குடியரசுத்தினத்தன்று டிராக்டர் பேரணி: விவசாயிகள் உறுதி!
டெல்லி விவசாயிகள் போராட்டம்.. சூடுபிடிக்கும் தமிழக அரசியல் களம்.. முக்கியச் செய்திகள்!
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!