தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்துகொண்ட திருவிதாங்கூர் ராணி, கேரள அரசு சபரிமலை விஷயத்தில் மட்டும் வேகம் காட்டுவது ஏன்? என புரியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத வழிபாட்டுக்காக கடந்த சில தினங்களுக்கு முன் திறக்கப்பட்டது. நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து கோயிலுக்கு பெண்கள் சிலர் நேற்று சென்றனர். ஆனால் கோயிலுக்குச் சென்ற பெண்களை வழியிலேயே போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதட்டமான சூழல் நிலவியது.
இதனைதொடந்ந்து பலத்த பாதுகாப்போடு சென்ற இரண்டு பெண்களையும் சபரிமலை சந்நிதானத்தின், கீழ்பகுதியில் உள்ள நடைப்பகுதியில் திரளாக திரண்ட பக்தர்கள் அவர்களை தடுத்தி நிறுத்தினர். பெண்களை வெளியேற்றக்கோரி பக்தர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு பெண்களையும் திருப்பி அனுப்ப போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் திருவிதாங்கூர் மகாராணி அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய் தம்புராட்டி, கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சியில் தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அனைத்து வயது பெண்களையும் கோயிலுள் அனுமதிக்க அரசு எடுக்கும் முயற்சி சனாதன தர்மத்துக்கு ஏற்பட்ட சவால் எனத் தெரிவித்தார்.
பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகளை நடைமுறைபடுத்தாமல் இருக்கும் அரசு சபரிமலை விஷயத்தில் மட்டும் வேகம் காட்டுவது ஏன் எனப் புரியவில்லை என்றார். பின் அரசின் இச்செயல் மிகவும் வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார். மேலும் பக்தர்கள் போராட்டத்தால் தற்போது நிலைமை சீரடைவது ஆறுதல் தருகிறது என்று அவர் கூறினார். மேற்கொண்டு “ஆசாரங்களை மீறி சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்படும்” என்று திருவிதாங்கூர் மகாராணி அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய் தம்புராட்டி கூறினார்.
மேலும் சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது தொடர்பாக திருவனந்தபுரத்தில் தேவசம் போர்டு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டத்திற்கு பின் சபரிமலை கோயில் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது என தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியுள்ளார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்