“ஈரானிடம் ரகசிய அணு ஆயுதக் கிடங்கு”-  இஸ்ரேல் குற்றச்சாட்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ரகசியமாக அணு ஆயுதக் கிடங்கை ஈரான் பராமரித்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு குற்றம்சாட்டியுள்ளார்.


Advertisement

‌ஐக்கிய நாடுகளின் பொதுசபையில் அவர் இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். வல்லரசு நாடுகளுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி, ரகசியமான இடத்தில் அணு ஆயுத கிடங்கை ஈரான் பராமரித்து வருகிறது என்றும் அதற்கான வீடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் நெதன்யாஹு கூறினார். மேலும் இது தொடர்பான ஆவணங்களை இஸ்ரேல் உளவுத்துறை சேகரித்து வைத்துள்ளது என்றும் தெரிவித்தார்.

ஈரானுக்கு அணு ஆயுதங்களை மேம்படுத்துவது தான் குறிக்கோள் என்றும், அதனை அந்நாடு நிறுத்திக் கொள்ள விரும்பாததன் காரணமாகவே ரகசியமாக அணு ஆயுதக் கிடங்கை பராமரித்து வருகிறது என்றும் தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement