நடிகர் விஜயகுமாருக்கு சொந்தமான ஆலப்பாக்கம் வீட்டில் இருந்து அவரது மகளும் நடிகையுமான வனிதா இன்று காலை வெளியேற்றப் பட்டார்..
நடிகர் விஜயகுமாருக்கு மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தில் பங்களா ஒன்று உள்ளது. ஏராளமான அறைகளை கொண்ட இந்த பங்களா சினிமா படப்பிடிப்புக்காக வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வீட்டை விஜயகுமார், தனது மகள் வனிதா வுக்கு படப்பிடிப்புக்காக கொடுத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்தும் வனிதா, வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்தாராம்.
இதுபற்றி விஜயகுமார் கேட்டபோது, ’இந்த வீட்டில் எனக்கும் பங்கு இருக்கிறது. இதை காலி செய்ய முடியாது’ என்று கூறினாராம். இதையடுத் து இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. விஜயகுமார் மதுரவாயல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வனிதாவிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடமும், இந்த வீட்டில் தனக்கு பங்கு உள்ளது என்று வனிதா கூறினார். அங்கு கூடிய பத்திரிகையாளர்களிடம் வனிதா தகராறு செய்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், போலீசார் வீட்டில் இருந்து வனிதாவை இன்று காலை வெளியேற்றினார். வீட்டில் இருந்த அவர் நண்பர்கள் ஏழு பேரை போலீசார் கைது செய்தனர்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை