[X] Close >

விராத் கோலியை ஓரங்கட்ட பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் திட்டம்!

AB-de-Villiers-set-to-replace-Virat-Kohli-as-RCB-Captain

விராத் கோலியை ஓரங்கட்டிவிட்டு டிவில்லியர்ஸுக்கு கேப்டன் பதவி வழங்க பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ள தாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Advertisement

ஐபிஎல் போட்டித் தொடரில் விராத் கோலி தலைமையில் விளையாடி வருகிறது, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. இந்த அணி, 3 முறை இறுதிப்போட்டி வரை சென்றும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியவில்லை. நட்சத்திர வீரர்கள் இருந்தாலும் தொடர்ந்து தோல்விகளை அந்த அணி சந்தித்து வருகிறது.

கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இந்த அணியின் கேப்டனாக விராத் கோலி இருந்து வருகிறார். அவர் தலைமை யில் 2016-ம் ஆண்டு மட்டுமே அந்த அணி இறுதிப்போட்டி வரை சென்றது. மற்ற தொடர்களில் லீக் சுற்றுகளிலேயே வெளியேறியது. இதனால் அடுத்த சீசனில் கோப்பையை வெல்வதற்கு ஏதுவாக கேப்டனை மாற்ற அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 


Advertisement

Read Also -> கடைசி டெஸ்ட்: இந்திய அணி திணறல், காப்பாற்றுவாரா விஹாரி?

Read Also -> கவுண்டியில் ஆடுகிறார் தமிழக வீரர் முரளி விஜய்


Advertisement

அதன்படி தென்னாப்பிரிக்க முன்னாள் வீரரும் விராத் கோலியின் நண்பருமான டி வில்லியர்ஸை கேப்டனாக நியமிக்க, அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் இந்த செய்தியை ஆர்சிபி நிர்வாகம் மறுக்கவில்லை.

பெங்களூரு அணியில், நியூசிலாந்தின் வெட்டோரி நீக்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் தலைமை பயிற்சியாளராகவும் பந்துவீச் சுப் பயிற்சியாளராக நெஹ்ராவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close