ஆணாதிக்கம் என்பதா? கங்கனா, சோனு சூட் கடும் மோதல்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


இந்தி படத்தில் இருந்து விலகிய வில்லன் நடிகர் சோனு சூட்டுக்கும் ஹீரோயின் கங்கனா ரனவத்துக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.


Advertisement

தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக ’தாம் தூம்’ படத்தில் நடித்தவர் இந்தி நடிகை கங்கனா ரனவத். இப்போது ’மணிகர்னிகா: தி குயின் ஆஃப் ஜான்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஜான்சி ராணியின் வாழ்க்கை கதையான இதில் அதுல் குல்கர்னி, சுரேஷ் ஓபராய் உட்பட பலர் நடிக்கின்றனர். வில்லன் நடிகர் சோனு சூட் முக்கிய வேடத்தில் நடித்தார். கங்கனாவுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் அதிகம் உள்ளன. தமிழில் ’வானம்’ படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இதை இயக்கினார். பின்னர் என்.டி.ஆர் வாழக்கை கதையை இயக்க கிரீஷ் சென்றுவிட்டதால் கங்கனாவே படத்தை இப்போது இயக்குகிறார். 


Advertisement

இந்நிலையில், இந்தப் படத்தில் இருந்து சோனு சூட் விலகியுள்ளார். படத்தில் சில மாற்றங்களை கங்கனா சொன்னார் என்றும் அதில் நடிக்க விருப்பம் இல்லாமல் சோனு விலகியதாகவும் கூறப்படுகிறது. 

இதற்கு கங்கனா அளித்த விளக்கத்தில், ‘சோனு சூட் என நண்பர்தான். கிரீஷ் இயக்கும்போது ஷூட்டிங்கில் அவரை பார்த்தது. பிறகு பார்க்கவி ல்லை. அவர் ’சிம்பா’ படத்தில் பிசியாக இருக்கிறார். அவர் கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார். பேட்ச் ஒர்க்கிற்கு கூட தேதி கொடுக்க மறுக்கிறார். பெண் இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை. அதனால்தான் இப்படி செய்கிறார்’ என்று கூறியிருந்தார்.இது பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில் கங்கனா புகாருக்கு விளக்கம் அளித்துள்ளார் சோனு சூட்.


Advertisement

‘கங்கனா எனது தோழி. ஆனால் அவர் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் பெண்ணிய பிரச்னையையும் ஆணாதிக்கம் என்பதையும் பயன்படுத்தியது கேலிக்கூத்தானது. படத்தை ஆண் இயக்குகிறாரா, பெண் இயக்குகிறாரா என்பது பிரச்னை இல்லை. திறமைதான் முக்கியம். இது இரண்டையும் வைத்து குழப்ப வேண்டாம். பெண் இயக்குனரான ஃபாரா கான் படத்தில் நான் நடித்திருக்கிறேன். எனக்கும் அவருக்கும் சிறந்த தொழில்முறை நட்பு இருக்கிறது. அதனால் பெண் இயக்குனர் படத்தில் நடிக்க விருப்பம் இல்லை என்று சொல்வதில் அர்த்தம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement