கோவை மாவட்டத்திற்குட்பட்ட அரசு பேருந்துகளில் நான்காயிரத்திற்கும் அதிகமான முதலுதவிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் பல பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகளே இல்லாதது கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவலளிக்கக் கோரி இருந்தார் வெள்ளலூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான டேனியல். இதற்கு பதிலளித்த போக்குவரத்துக் கழகம், 67 லட்சத்து 54 ஆயிரத்து 100 ரூபாய் செலவில், நான்காயிரத்து அறுநூற்று ஐம்பத்து எட்டு முதலுதவிப் பெட்டிகள் வாங்கிப் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது. ஆனால் பல பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகள் வைக்கப்படவில்லை என டேனியல் குறை கூறியிருந்தார்.
இது தொடர்பாக புதிய தலைமுறையும் கள ஆய்வு மேற்கொண்டது. அதிலும்,பல பேருந்துகளில் முதலுதவிப் பெட்டிகள் இல்லாத நிலை இருப்பது தெரிய வந்தது.
எனவே, போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளபடி வாங்கிய முதலுதவிப் பெட்டிகள் என்ன ஆனது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Loading More post
தமிழகத்தில் ராகுலின் பரப்புரைக்கு தடைகோரி பாஜகவின் எல்.முருகன் கடிதம்
எடப்பாடி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்ய தனி கவனம் செலுத்தும் திமுக!
“சென்றுவா வெற்றி நமதே! என்று அப்பா சொன்னார்” விஜய பிரபாகரன் விருப்ப மனு தாக்கல்
கேரளாவின் பாஜக முதல்வர் வேட்பாளர் மெட்ரோ மேன் ஸ்ரீதரன் - அதிகாரபூர்வ அறிவிப்பு
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இரு மாறுபட்ட தீர்ப்பு
நிர்பந்தமா, நிதானமா? - சசிகலா விலகல் எழுப்பும் கேள்விகளும் பின்னணியும்!
புதுச்சேரியில் 9, 10, 11 தேர்வு சாத்தியமா?... குழப்பத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள்!
முரண்டு பிடிக்கும் திமுக தலைமை; அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் - இழுபறியில் பேச்சுவார்த்தை
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை