மகான் அரவிந்தர் பிறந்த தினம் : ஏராளமான பக்தர்கள் தியானம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகான் அரவிந்தரின் 146ஆவது பிறந்த தினம் புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கொண்டாடப்பட்டது.


Advertisement

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் மகான் அரவிந்தரின் 146ஆவது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான அரவிந்தரின் பக்தர்கள் புதுச்சேரிக்கு வந்திருந்தனர். அரவிந்த ஆசிரமத்தில் இன்று அதிகாலை கூட்டு தியானம் நடைபெற்றது. போன்பயர் விறகு மூட்டி யாகம் வளர்த்து, ஏராளமானோர் தியானம் செய்தனர். மேலும் அரவிந்தர் மற்றும் அன்னை பயன்படுத்திய அறைகள் மற்றும் பொருட்கள் பக்தர்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டிருந்தன. இதனை பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று பார்வையிட்டனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement