'தோற்றது 11 ஜெயித்தது இரண்டே இரண்டு' இந்தியாவின் லார்ட்ஸ் ரெக்கார்டு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகப் புகழப்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இதனையடுத்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.


Advertisement

இந்தப் போட்டியில் இந்தியா போராடி தோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன்களில் கோலி மட்டுமே சிறப்பாக விளையாடினார். இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. கிரிக்கெட்டின் மெக்காவாக கருதப்படுவது லார்ட்ஸ் மைதானம். இந்த மைதானம் இந்தியாவுக்கு ராசியில்லாத மைதானம்தான்.


Advertisement

இதுவரை, லார்ட்ஸ் மைதானத்தில் 17 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி, 11 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. மேலும், 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இந்திய அணியை பொறுத்தவரை கபில் தேவை தலைமையிலும் தோனி தலைமையிலுமான இந்திய அணி மட்டுமே வெற்றிக் கண்டுள்ளது. 1986 ஆம் ஆண்டு, கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி, லார்ட்ஸில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இங்கிலாந்திற்கு எதிரான இந்த போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.


Advertisement

2014 ஆம் ஆண்டு, அலிஸ்டர் குக் தலைமையிலான இங்கிலாந்து அணியை 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தோனி தலைமையிலான இந்திய அணி. இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய பந்து இஷாந்த் ஷர்மா, 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 95 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது. இதன் மூலம், இந்திய அணி தனது இரண்டாவது வெற்றியை லார்ட்ஸில் பதிவு செய்தது. இப்போது கோலி தலைமையிலான இந்திய அணி லார்ட்ஸில், ஜோ ரூட் தலைமையிலான இந்திய அணியை வீழ்த்துமா என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.


 

loading...

Advertisement

Advertisement

Advertisement