தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணி வீரர் முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதலில், இந்திய போர்டு பிரசிடென்ட் அணி யுடன் மோதியது. அந்தப் போட்டி டிராவில் முடிந்தது. இந்நிலையில் இந்திய ஏ அணியுடன் அங்கீகாரமில்லாத நான்கு நாள் டெஸ்ட் போட்டியி ல் பங்கேற்றுள்ளது. பெங்களூரில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க ஏ அணியின் கேப்டன் கயா ஸாண்டோ, பேட்டிங்கை தேர்தெடுத்தார்.
அதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக்கெட்டை வீழ்த்தினார். சைனி, குர்பானி தலா 2 விக்கெட்டையும் சேஹல் ஒரு விக் கெட்டையும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய இந்திய ஏ அணி இரண்டாம் நாள் ஆட்டத்தில், 2 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் பிருத்வி ஷாவும் மயங்க் அகர்வாலும் அபாரமாக ஆடினர். சதமடித்த பிருத்வி 136 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மறுபக்கம் அதிரடியாக விளையாடிய மயங்க் அகர்வால் 220 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் இருந்தார். அவருடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருந்தார். மூன்றாவது நாள் நேற்று நடந்தது. ஆட்டம் தொடங்கியதுமே மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அடுத்து வந்தவர்களில் விஹாரி 54 ரன்களும் பாரத் 64 ரன்களும் அக்ஷர் படேல் 33 ரன்களும் எடுத்தனர். 8 விக்கெட் இழப்புக்கு இந்திய ஏ அணி 548 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்யப்பட்டது.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க ஏ அணிக்கு, சிம்ம சொப்பனமாக இருந்தார் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். அந்த அணியின் தொடக்க அட்டக்காரர்கள் எர்வி (3), மலன் (0) கேப்டன் கயா ஸோண்டோ (0), முத்துசாமி (41) ஆகியோரின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தி மிரட்டினார். அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்த நிலையில் ஆடி வருகிறது. சுபைர் ஹம்சா 46 ரன்களுடன் செகண்ட் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை அள்ளிய சிராஜ், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். நான்காவது நாள் ஆட்ட ம் இன்று நடக்கிறது.
Loading More post
பதற்றத்தில் டெல்லி: செங்கோட்டையை முற்றுகையிட்ட விவசாயிகள்.. போலீசார் குவிப்பு!
கதிகலங்கும் டெல்லி: வன்முறைக்குள் ஒரு மனிதாபிமானம்: வைரல் வீடியோ!
"சட்ட விதிகளை அற்பமாக்கியுள்ளது!" - POCSO குறித்த மும்பை ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிர்ப்பு
போலீசார் அறிவுறுத்திய வழித்தடங்களை விட்டு விலகும் சில விவசாய குழுக்கள்: டெல்லியில் பதற்றம்
டிராக்டர் பேரணி: தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு... டெல்லியில் பதற்றம்!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
PT Exclusive: "தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும்!"- ராகுல் காந்தி நேர்காணல்
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி