இளையராஜா காப்புரிமை விழிப்புணர்வை ஏற்படுத்தினார்: மிஷ்கின் பாராட்டு

mysskin-appreciation-for-ilayaraja

காப்புரிமையின் முக்கியம் குறித்த விழிப்புணர்‌வை ஏற்படுத்தி இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தாம் ‌பாராட்டுத் தெரிவித்‌துக் கொ‌ள்வதாக திரைப்பட இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தார்.


Advertisement

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தைக் கொண்டாடும் வகையில் பல நாடுகளில் அவர் தொடர் பாடல் கச்சேரிகளை நடத்தி வருகிறார். இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட முன் அனுமதி பெற வேண்டும் என்று எஸ்.பி.பிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு எஸ்பிபி தரப்பில் பதில் தரப்பட்டது. இந்த விவகாரம் இசையுலகில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ள நிலையி‌ல், பிரச்னையை பெரிதுபடுத்தவேண்டாம் என இசைப்பிரியர்களுக்கும், ஊடகங்களுக்கும் தனது முகநூல் பக்கத்தில் எஸ்பிபி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மிஷ்கின், காப்புரிமையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்‌வை ஏற்படுத்தி இருக்கும் இளையராஜாவுக்கு தம் ‌பாராட்டு எனவும், இளைய‌ராஜா பாடலின் வெற்றிக்கு அவரின் இசை மட்டுமே காரணம் எனவும் கூறியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement