சீனாவில் குழந்தைகளுக்காக புதிய ரோபோட் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த ரோபோக்கள் குழந்தைகளுடன் பேசும், கதை சொல்லும், பாடம் நடத்தும் இன்னும் பல வேலைகள் செய்யும்.
ரோபோட் தயாரிப்புகளுக்கு பெயர் போன நாடு சீனா. இங்கு ரோபோட் தயாரிப்புகளில் புதிய புதிய சாதனைகள் அவ்வவ்போது படைக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகள் நடப்பதற்காக, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய என பல்வேறு பணிகளுக்காக ரோபோட்களை தயாரித்து சீன நிறுவனங்கள் அசத்தி வருகின்றன.
அந்த வகையில் வீட்டில் தனியாக இருக்கும் குழந்தைகளுக்கு என்றே “ஐபால்” (iPal) புதிய ரோபாட்டை சீனாவில் அவதார் மைண்ட் ரோபோட் டெக்னாலஜி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபாட் இரண்டு மொழிகளில் பேசக் கூடியது. இந்த ரோபோட் கணக்கு பாடங்கள் நடத்தும். ஜோக்குகள் சொல்லும். குழந்தைகளுடன் உரையாடும். மனித உருவத்தில் உள்ள இந்த ரோபோட் 5 வயது சிறுவனின் உயரத்தில் இருக்கும். அதாவது 3.5 அடி உயரம் இருக்கும். தன்னில் பொறுத்தப்பட்டுள்ள வீல் சக்கரங்கள் மூலம் நகரும் இந்த ரோபோக்கள் நடனமும் ஆடும்.
பெற்றோர்கள் வெளியில் இருந்து கொண்டே இந்த ரோபோட்களை கண்காணிக்க முடியும். ஏனெனில் இவை ஸ்மார்ட் போன் ஆப்ஸ் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. ரோபோட்டின் மத்தியில் ஒரு ஸ்கிரீன் போன்று அதற்காக உள்ளது.
குழந்தைகளுக்கு துணையாக இருக்க வேண்டும் என்ற யோசனையில் தான் இந்த ரோபோட் உருவாக்கப்பட்டதாக அவதார் மைண்ட் ரோபோட் டெக்னாலஜி நிறுவனத்தின் துணை நிறுவனர் திங்யு ஹுவாங் கூறியுள்ளார். மேலும், “ஒரு குழந்தை இதனை பார்த்தால், தன்னுடைய நண்பனாக நினைக்கும். தங்களுடைய குடும்பத்தில் மற்றொரு குழந்தையாக இருக்கும். பெற்றோர்கள், ஆசிரியர்களின் பணிகளை இது செய்யும், அவர்களுக்கு இது மாற்று என்று கூறமாட்டேன். அவர்களின் சுமைகளை இது குறைக்கும்” என்றார் ஹுவாங்.
இந்த ரோபோட்டின் மதிப்பு 9 ஆயிரம் யுவான். இந்திய ரூபாயின் மதிப்பில் 95 ஆயிரம் ரூபாய். இந்த ரோபோட்கள் ஷாங்காய் நகரில் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் பலரும் ஆர்வமாக பார்வையிட்டு வருகின்றனர்.
Loading More post
சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா? போலீசார் விசாரணை
"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை"-சுகாதாரத்துறை செயலாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!