தமிழக காவல்துறை ஆணையர்கள் அதிரடி மாற்றம் 

IPS-Police-Officers-are-Transfer-in-TamilNadu

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குப் பிறகு தென்மண்டல ஐஜி சைலேஷ்குமார் உட்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


Advertisement

தமிழகத்தில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவில் திருப்பூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்ட காவல்துறை ஆணையர்கள் மாற்றபட்டு, புதியதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஐபிஎஸ் அதிகாரிகள் பாஸ்கரன் மற்றும் மனோகரன் டிஐஜி பதவியில் இருந்து ஐஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். மேலும் ஐஜி சண்முக ராஜேஸ்வரன், பாஸ்கரன், டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் கமிஷனர் நாகராஜன், மகேஷ் குமார் அகர்வால் மற்றும் சேஷாயி ஆகியோர் உட்பட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

ஐபிஎஸ் மனோகரன் ஐஜி பதவி உயர்வுடன் திருப்பூர் ஆணையராகவும், சமூக நீதி மற்றும் மனித உரிமை டிஐஜி பாஸ்கரன் அதே துறையின் ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ்குமார் யாதவ் சென்னை ஆயுதப்படை ஐஜியாகவும் மற்றும் மதுரை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் சிபிசிஐடியின் சிறப்பு பிரிவு ஐஜியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement