முதலமைச்சர் இல்லம் அருகே பைக் ரேஸில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அடையாறு திருவிக மேம்பாலத்தில் நள்ளிரவில் பைக் ரேஸில் இளைஞர்கள் ஈடுபடுவதை "புதியதலைமுறை" பிரேத்யேக காட்சிகளோடு நேற்று இரவு வெளியிட்டது.
இதையடுத்து அடையாறு துணை ஆணையர் சஷாங்சாய் தலையிலான போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் உள்பட பல்வேறு தகவல்களை வைத்து தீவிரமாக தேடினர். இந்நிலையில், சிறுவன் உள்பட 4 பேரை அடையாறு போலீசார் கைது செய்துள்ளனர்.
புளியந்தோப்பைச் சேர்ந்த ஹலில் பாஷா (19), அதே பகுதியில் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். அப்துல் கரீம் (19) பெரியமேட்டில் லெதர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பெரம்பூரைச் சேர்ந்த சல்மான் (23) ஏசி மெக்கானிக். பெரம்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரை அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். 2 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பைக் ரேஸில் ஈடுபட்டது தொடர்பாக சில இளைஞர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடையாறில் உள்ள முதலமைச்சர் இல்லம் அருகே இந்த பைக் ரேஸ் நடைபெற்றதாக சற்று நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.
Loading More post
‘உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டி’ திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
டாப் 5 தேர்தல் செய்திகள் : பாஜக வேட்பாளர் உத்தேச பட்டியல்..பாமகவுக்கு மாம்பழ சின்னம்!
கொளத்தூர் இல்லை.. திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு
முதலிடத்தில் இந்தியா - டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துடன் மோதல்!
பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு : தேர்தல் ஆணையம்
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!