சுற்றுலா பயணிகளின் வருகையால் காஷ்மீரின் லே பகுதியில் சுற்றுலா சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், காஷ்மீரின் லே பகுதியில் இதமான காலநிலை நிலவுவதால், அங்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. இமய மலை அடிவாரத்தில் உள்ள காஷ்மீரின் லே பகுதி, கடல் மட்டத்தில் இருந்து சுமார் 17 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது. தற்போது கோடை காலம் என்பதால், இங்கு குளிர் குறைந்து ரம்மியமான சூழல் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து லேவுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர். குறிப்பாக அங்குள் பாங்காங் சோ ஏரி, மலைப் பகுதி ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு களித்து வருகின்றனர். இதனால் லே பகுதியில் சுற்றுலா சீசன் தற்போது களைகட்டத் தொடங்கியுள்ளது.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?