அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அணு ஆயுதங்களை சுமந்து 5,000 கி.மீ இலக்கையும் சென்று தாக்கும் வல்லமை பெற்ற அக்னி 5 ஏவுகணையின் பரிசோதனை
வெற்றிகரமாக நடைபெற்றது.


Advertisement

ஒடிசாவின் கடற்கரையோரத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் உள்ள நகரும் ஏவுதளத்தில் இருந்து அக்னி 5 என்ற ஏவுகணை
பரிசோதிக்கப்பட்டது. காலை 9.4‌8 மணியளவில் நடத்தப்பட்ட இந்த ஏவுகணை சோதனை 6-வது முறையாக விண்ணில் ஏவி
வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு வெற்றிபெற்றது.


Advertisement

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இலக்கை தாக்கும் வல்லமை பெற்ற அக்னி 5 ஏவுகணை எதிரிகளின் இலக்குகளை மிக எளிதாக அழிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்னி 5 ஏவுகணை இலக்கை குறி தவறாமல் பாய்ந்து இலக்குகளை அழித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்ட நிலையில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கலாம்.

loading...

Advertisement

Advertisement

Advertisement