மீண்டும் டெஸ்ட் போட்டியில் இடம் பெற்ற தினேஷ் கார்த்திக்

Dinesh-karthik-replaced-injured-Saha

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றிருந்த விருத்திமான் சாஹா காயம் காரணமாக விலகியுள்ளதால், தினேஷ் கார்த்திக் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார். 


Advertisement

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்த்தை வழங்கியது. இந்நிலையில் தன்னுடைய முதல் டெஸ்ட் போட்டியில் வருகிற 14ம் தேதி இந்தியாவை சந்திக்கிறது ஆப்கானிஸ்தான் அணி. இந்தப் போட்டிக்கான அணி விரர்களை இரு அணிகளுமே அறிவித்துவிட்ட நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் வருகிற ஜூன் 14 முதல் 18ம் தேதி வரை நடக்கிறது. 

இந்த டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்ட சஹா, ஐபிஎல் தொடரின் போது கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் சென்னை எதிரான இறுதி போட்டியிலும் கூட விளையாடத அவர், தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்ட சாஹாவிற்கு பதிலாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடுவார் இந்திய கிரிக்கெட் வாரியம் தேர்வு அறிவித்துள்ளது. கேப்டன் கோலிக்கு பதிலாக இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரஹானே செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement