[X] Close >

ஸ்டெர்லைட் மூடப்பட்டது என்ற அறிவிப்பு வரவேண்டும்: கவிஞர் வைரமுத்து 

Sterlite-should-close-the-plant--Vairamuthu

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்று மாநில அரசு அறிவிப்பது நாடு விரும்பும் நல்ல முடிவு என கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். 


Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைப்பெற்ற போராட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். 

இப்பிரச்சனை தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் பெரும் புயலை உருவாகியுள்ளது. இந்நிலையில் வைரமுத்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்டெர்லைட் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது என்று மாநில அரசும், பெட்ரோல் விலை பெரிதும் குறைக்கப்பட்டது என்று மத்திய அரசும், போராட்டம் முடிவுக்கு வந்தது என்று பொதுமக்களும் அறிவிப்பதுதான் நாடு விரும்பும் நல்ல முடிவுகளாகும்’. என தெரிவித்துள்ளார். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close