தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் நேற்று வரை 11 பேர் உயிரிழந்தனர். இன்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது. அப்போது போலீசார் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால், தூத்துக்குடியில் பதட்டம் நீடித்து வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுகவினர் ஸ்டாலின் உடன் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டால் நகரமே இரண்டு நாட்களாக அமளிக்காடாக மாறியிருக்கிறது” என்றார்.
மேலும், “நடந்த சம்பவங்களை என்னிடம் வேதனையோடு விளக்கிக் கூறினார்கள். காயமடைந்தவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி வந்து மக்களிடம் பேசி ஆலை மூடப்படும் என வாக்குறுதி அளித்திருக்க வேண்டும். எஸ்.பி., கலெக்டரை உடனடியாக மாற்றி புதியவர்களை நியமித்தால்தான் சுமூகமான நிலை ஏற்படும். மக்களை தாக்கும் காவலர்களை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று கூறினார் ஸ்டாலின்.
Loading More post
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
நாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி