புதிய களம் காண வருகிறார் நடிகர் அரவிந்த்சாமி..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அரவிந்த்சாமி இயக்குநராக அறிமுகமாகும் படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.


Advertisement

நீண்ட நாட்களாக நடிப்பில் இருந்து விலகியிருந்த அரவிந்தசாமி, கடல் படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். அதன்பிறகு அவர் நடித்த தனி ஒருவன், போகன் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச் சிவந்த வானம், சதுரங்க வேட்டை-2 உள்ளிட்டப் பல படங்களில் நடித்து வருகிறார்.


Advertisement

இந்நிலையில், தனது இயக்குநர் கனவு விரைவில் நனவாகப் போவதாக அறிவித்த அரவிந்த்சாமி, அதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றன.

loading...

Advertisement

Advertisement

Advertisement