‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்பட்டவர் நடிகை ஓவியா. இவர் இந்திய அளவில் அதிகம் விரும்பத்தக்க பெண்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
‘களவாணி’, ‘முத்துக்கு முத்தாக’, ‘மெரினா’ என பல படங்களில் கதாநாயகி நடித்தும் அதிகம் புகழ் அடையாத ஓவியா, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தார். அதில் அவர் பயன்படுத்திய ‘ஷட் அப்’ வசனம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. இந்நிகழ்ச்சியில் 80 நாட்கள் பங்கேற்ற ஓவியா, தன் உண்மை முகத்தை வெளிப்படுத்தினார். அவரது உண்மை முகம் அவருக்கு அதிக ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. அந்நிகழ்ச்சிக்கு அவர் மீண்டும் திரும்புவாரா என பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்தளவுக்கு அமோக அன்பை சம்பாதித்தவர் ஓவியா.
இந்நிலையில் ‘டைம்ஸ்’ பத்திரிகை 2017ஆம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க பெண்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் நடிகை ஓவியாவுக்கு 28 ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி ஷெல்லார் முதல் இடத்தையும் நடிகை தீபிகா படுகோன் 2ஆவது இடத்தையும் எமி ஜாக்சன் 6ஆவது இடத்தையும் நடிகை பிரியங்கா சோப்ரா 7 வது இடத்தையும் சன்னி லியோன் 8ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதேபோல் ‘கபாலி’ பட நாயகி ராதிகா ஆப்தே 43 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
Loading More post
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு... இளம் தாயை 6 கி.மீ தூரம் சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!
''கோப்பையை என் கைகளில் கோலி கொடுத்தபோது கண் கலங்கிவிட்டேன்'' - மனம் திறந்த நடராஜன்!
“நான் தமிழன் இல்லை; ஆனால் தமிழை மதிக்கிறேன்” - ஈரோடு பரப்புரையில் ராகுல் காந்தி பேச்சு
உங்க பெயர் கமலாவா? அப்போ உங்களுக்கு இலவசம்! - பொழுதுபோக்கு பூங்காவின் அறிவிப்பு
குடியரசு தின அணிவகுப்பில் அதிவேக விமானப்படையை வழிநடத்தும் முதல் பெண்மணி சுவாதி ரத்தோர்
திரையும் தேர்தலும் 2 - ராஜாஜி Vs அண்ணா, எம்.ஜி.ஆர் + கருணாநிதி!
9 கிமீ நீளம்; 40 மாடி கட்டிடம் கட்டுமளவு வானளாவிய உயரம்; சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்
பூமி, சூரரைப் போற்று, சில புரிதல்கள்.. 'கார்ப்பரேட்' கழுவியூற்றப்படுவது எந்த அளவுக்கு சரி?
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!