டெல்லியில் தொழிலதிபரிடம் பித்தளைத்தட்டை காட்டி சுமார் 1கோடியே 43 லட்ச ரூபாயை ஏமாற்றியுள்ளனர்.
டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் நரேந்தர். இவர் துணி ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை சந்தித்த விரேந்தர் மற்றும் நிதின் மோகன் ‘ரைஸ் புல்லர்’ என்ற வார்த்தையை கூறி ஆசைக்காட்டியுள்ளனர். ரைஸ் புல்லர் என்ற வார்த்தை கேட்க புதிதாக இருந்ததால் நரேந்தருக்கு இதுகுறித்து ஆர்வம் அதிகமாகியுள்ளது. மேலும் அவர்கள் பேசியது இவருக்கு பேராசையை ஏற்படுத்தியுள்ளது. இவரது ஆவலையும் பேராசையையும் பயன்படுத்திய அந்த நபர்கள் இந்த ரைஸ் புல்லிங்கால் உங்களுக்கு பல கோடி லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். ரைஸ்புல்லர் எனக்கூறி ஒரு பித்தளை தட்டை காண்பித்துள்ளனர்.
இதனை சோதனை செய்து காட்ட வேண்டுமென்றால் அதற்கு ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் என கூறியுள்ளனர். ரைஸ் புல்லர் ஆர்வத்தால் அவரும் அவர்கள் கேட்ட தொகையை கொடுத்துள்ளார். அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்கள் தலைமறைவாகினர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நரேந்தர் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவலர்கள் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் தந்தை மகன் என்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து விஞ்ஞானிகள் அணியும் உடை மற்றும் சில உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
Loading More post
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி