பஞ்சாப்பை பந்தாடுமா சிஎஸ்கே? வருகிறார் முரளி விஜய்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது.


Advertisement

பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, திரில்லிங் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சென்னை தோற்பது உறுதி என்ற நிலையில் இருந்த போது ஆல்ரவுண்டர் பிராவோ அதிரடியாக விளாசி வெற்றிக்கு உதவினார்.

இரண்டாவது போட்டியில் சென்னை அணி,  கொல்கத்தாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற சாம் பில்லிங்ஸ் உதவினார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய இந்த இங்கிலாந்து வீரர், பந்துகளை நாலாபுறமும் பறக்க விட்டு வேடிக்கை காட்டினார். இதன் காரணமாக சென்னை அணி வெற்றி பெற்றது.


Advertisement

சென்னை அணி தனது மூன்றாவது ஆட்டத்தில் இன்று பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. மொகாலியில் நடக்கும் இந்தப் போட்டி யில் சிஎஸ்கே-வில் முரளி விஜய் களமிறங்குவார் எனத் தெரிகிறது. கடந்த இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த அவர், இன்று தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார். முரளி விஜய் இதற்கு முன் பஞ்சாப் அணிக்காக விளையாடியவர். அவர்  இன்று  தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினால், அம்பதி ராயுடு அடுத்த வரிசையில் இறங்குவார். ஏற்கனவே காயப் பிரச்னையில் தடுமாறும் சென்னை அணிக்கு மேலும் ஒரு சிக்கலாக, லுங்கி நிகிடியின் தந்தை மரணச் செய்தி அமைந்திருக்கிறது. அவர் தென்னாப்பிரிக்கா திரும்பி விட்டார். கடந்த 2 போட்டிகளில் விளையாடாமல் இருந்த அவரை, அடுத்தடுத்தப் போட்டிகளில் களமிறக்கச் சென்னை அணி திட்டமிட்டிருந்தது. 

சிஎஸ்கே-வில் ஏற்கனவே, கேதர் ஜாதவ், சுரேஷ் ரெய்னா, டுபிளிசிஸ் ஆகியோர் காயப் பிரச்னையில் சிக்கித்தவிக்கின்றனர். கேதர் ஜாதவுக்குப் பதிலாக சேர்க்கப்பட்டிருக்கிற இங்கிலாந்து வீரர் டேவிட் வில்லி இன்றைய போட்டியில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. கடந்த போட்டிகளில் அதிரடி காட்டாத கேப்டன் தோனி, இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கலாம். 


Advertisement

பஞ்சாப் அணியில் தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் அதிரடி சரவெடி நடத்துகிறார். அவருடன் மயங்க் அகர்வால், கருண் நாயர், ஆரோன் பின்ச், யுவராஜ் சிங், ஸ்டொயினிஸ் என அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் யாரும் சோபிக்கவில்லை. இன்றைய போட்டியில் இவர்களில் யாராவது நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தால் பஞ்சாப்புக்கு வலுவாக இருக்கும். யுவராஜ் சிங்கிற்கு பதில் மனோஜ் திவாரி இன்று களமிறங்கலாம். சுழல் பந்துவீச்சில் முஜிப், அஷ்வின் மற்றும் அக்‌ஷர் படேல் மிரட்டுவது அவர்களின் பலம். இதற்கிடையே வெயிடிங் லிஸ்டில் இருக்கும் கெய்ல் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது.

முந்தைய ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த அஸ்வின் இப்போது பஞ்சாப் கேப்டனாகி இருப்பதால், தோனியின் மூவ் என்ன என்பது அவருக்குத் தெரியும். அதனால் அதற்கேற்ப வீரர்களை தயார்படுத்த வாய்ப்பிருக்கிறது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் கூறும்போது, ‘கடந்த 2 போட்டிகளில் நாங்கள் வென்றி ருக்கிறோம். அது எங்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. சுரேஷ் ரெய்னா அணியில் இல்லாதது ஏமாற்றம்தான். அவர் சிறந்த வீரர். அவரது இடத்தை யாரும் நிரப்ப முடியாது. முரளி விஜய் கடந்த முறை பஞ்சாப் அணிக்கு விளையாடியவர். அதனால் அவர் இன்றைய போட்டியில் இறக்கப்படலாம்’ என்றார். போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. 

உத்தேச அணி விவரம்:

பஞ்சாப்:
ராகுல், மயங்க் அகர்வால், ஆரோன் பின்ச்/ டேவிட் மில்லர், யுவராஜ் சிங்/மனோஜ் திவாரி, கருண் நாயர், ஸ்டோயினிஸ், அக்சர் படேல், அஸ்வின், ஆண்ட்ரு டை, மோகித் சர்மா, முஜிப்.


சிஎஸ்கே:
வாட்சன், ராயுடு, முரளி விஜய், தோனி, சாம் பில்லிங்ஸ், ஜடேஜா, பிராவோ, டேவிட் வில்லி, ஹர்பஜன், ஷர்துல் தாகூர், இம்ரான் தாஹிர்

loading...

Advertisement

Advertisement

Advertisement