திருப்பத்தூர் அருகே 10ம் வகுப்பு மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரின் மரணத்திற்கு காரணமான இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வேடியப்பன் நகரைச் சேர்ந்தவர் லாவண்யா. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இவர் திருப்பத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இதனிடையே கடந்த 3 தினங்களுக்கு முன் லாவண்யா திடீரென மாயமானார். இதனால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காணாமல்போன லாவண்யாவை போலீசாரும் தேடிவந்தனர். இந்நிலையில் இன்று மாலை ஹவுசிங்போர்டு பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் லாவண்யா சடலமாக மிதந்தார். இதனையடுத்து தீயணைப்புத் துறை உதவியுடன் லாவண்யா மீட்கப்பட்டார். அவரது உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே லாவண்யாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது இறப்பிற்கு அப்பகுதியில் வசிக்கும் வேறு சமுதாயத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர்தான் காரணம் எனக் கூறி லாவண்யாவின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர்- தருமபுரி சாலையில் அவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே லாவண்யா சடலாக மீட்கப்பட்ட இடத்தில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாவும், அதில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என அவர் எழுதி வைத்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் லாவண்யாவின் உறவினர்கள் குற்றஞ்சாட்டும் அந்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை