சுரேஷ் ரெய்னா 2 போட்டியில் விளையாட மாட்டார்: சிஎஸ்கே அறிவிப்பு!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கொல்கத்தாவுக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் காயமடைந்ததால், அடுத்த 2 போட்டிகளில் சுரேஷ் ரெய்னா விளையாட மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.


Advertisement

பதினோறாவது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா நடந்து வருகிறது. முதல் போட்டியில் மும்பையை எதிர்கொண்ட சென்னை, திரில்லிங் வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை, அணி, சொந்தமண்ணில் கொல்கத்தா அணியை செவ்வாய்க்கிழமை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் சாம் பில்லிங்ஸின் அதிரடியில் சென்னை அணி வென்றது. போட்டியின் போது, சுரேஷ் ரெய்னா காயமடைந்தார். அவர் வலதுகாலின் தசைநாரில் காயம் ஏற்பட்டதால் ரன் எடுக்க, ஓடுவதற்கு சிரமப்பட்டார். அடுத்த ஒருவாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று அணியின் பிசியோதெரபிஸ்ட் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து வரும் 15-ம் தேதி, பஞ்சாப் அணிக்கு எதிராக நடக்கும் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 20 -ம் தேதி நடக்கும் போட்டியிலும் பங்கேற்க மாட்டார் என்று சிஎஸ்கே தெரிவித்துள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement