பாகிஸ்தானில் பாடகி சுட்டுக்கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாகிஸ்தானின் கராச்சி அருகே விழா ஒன்றில் பாடிக் கொண்டிருந்த பாடகி சுட்டுக் கொல்லப்பட்டார். 


Advertisement

பாகிஸ்தானின் சிந்த் என்ற கிராமத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் 24 வயதான பாடகி சமினா சமூன் பாடிக்கொண்டிருந்தார். அங்கு கூடியிருந்தவர்கள் அவரது பாடலுக்கு வரவேற்பு அளித்து, கையில் இருந்த பணத்தை வீசி உற்சாகம் அளித்தனர். கர்ப்பிணியான சமினா சமூன் பாடிக்கொண்டிருந்த போது, மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து அவர் கணவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பாடகி கர்ப்பிணி என்பதால் காவல்துறையினர் இரட்டை கொலை வழக்காகப் பதிவு செய்து, கொலையாளியை கைது செய்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement