சீமான் மீது கொலை முயற்சி வழக்கு கொடுமையானது -வைரமுத்து வேதனை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சீமான் மீது கொலை முயற்சி வழக்குப் பதியப்பட்டுள்ளது குறித்து பாடலாசிரியர் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார்.


Advertisement


சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு எதிராக பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த 4000க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அதனை எதிர்த்து சிலர் காவல்துறையினரை தாக்கினர். ஆகவே அங்கு மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் தாக்கப்படும் வீடியோ காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சீமான், பாரதிராஜா உள்ளிட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சீமான் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், “அறவழிப் போராட்டத்தில் எதிர்பாராமல் நிகழும் வன்செயல்கள் எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால், சீமான் மீது கொலை முயற்சிப் பிரிவில் வழக்குப் பதிவது கொடுமையானது” என்று தெரிவித்துள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement