அடுத்தடுத்து 2பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சிவகாசியில் அடுத்தடுத்து 2 பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 


Advertisement

சிவகாசி மாவட்டம் ராமுதேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையொன்றில் நண்பகல் நேரிட்ட வெடி விபத்தில் ரவி, சேகர் என்ற தொழிலாளர்கள் பலியாகினர். பட்டாசுகளை ஏற்றுவதற்காக வந்திருந்த லாரியும் தீக்கிரையானது. காயமடைந்த 3 பேர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் காக்கிவாடன்பட்டி என்ற இடத்திலுள்ள மற்றொரு பட்டாசு ஆலையிலும் வெடி விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் தெய்வானை, சுப்பிரமணியன் ஆகிய இருவரும் இந்த விபத்தில் உயிரிழந்தனர். கோடைக்காலத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாததே இந்த வெடி விபத்துகளுக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement