ஹாலிவுட் இயக்குநரிடம் கமல் கேட்ட மன்னிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஹாலிவுட் இயக்குநரிடம் தான் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 


Advertisement

தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டிருக்கிறார். மும்பை சென்றுள்ள கமல், அங்கு அவரை சந்தித்திருக்கிறார். ‘ஃபாலோயிங்’,‘மெமண்டோ’,‘டார்க் நைட் ட்ரையாலஜி’ போன்ற படங்களின் மூலம் உலக தரவரிசை இயக்குநர்கள் பட்டியலில் முன் வரிசையில் இருப்பவர் கிறிஸ்டோபர். ஆகவே இவர்களது சந்திப்பு முக்கிய செய்தியாகி உள்ளது. மேலும் கமல் இச்சந்திப்பு குறித்து, “இன்று கிறிஸ்டோபர் நோலனை சந்தித்தேன். அவரிடம் ‘ட்ங்கிர்க்’ படத்தை படச்சுருளில் பார்க்காமல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பார்த்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன். அதற்கு பிரதிபலனாக என்னுடன் ‘ஹேராம்’ படத்தின் டிஜிட்டல் வடிவத்தை அவருக்கு காணக் கொண்டுத்தேன். அவர் எனது ‘பாபநாசம்’ படத்தை பார்த்தது பெரிய சர்ப்ரைஸ்” என்று கூறியிருக்கிறார்.

loading...

Advertisement

Advertisement

Advertisement