சென்னையில் குவியப்போகும் அயல்நாட்டு ராணுவங்கள்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சென்னையை அடுத்த திருவிடந்தையில் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி ராணுவக் கண்காட்சி நடைபெற உள்ளது. 


Advertisement

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் நடைபெற உள்ள இந்த ராணுவக் கண்காட்சியில் 80க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்க உள்ளன. 67 ஏக்கர் பரப்பளவில் சுமா‌ர் 450 கோடி ரூபாய் செலவில் கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தக் கண்காட்சியில் அமெரிக்கா, இஸ்ரேல், தென் கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்க உள்ளன. ஏப்ரல் 11ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை கண்காட்சி நடைபெறும்.

இதில், இந்தியாவின் அதி‌நவீன போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் இடம்பெற உள்ளன. கடற்பரப்பிற்கு எதிரே உள்ள நிலப்பரப்பில் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில், கடலில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட உள்‌ளன. பொதுமக்கள் கண்டு களிக்கும் வகையில் வான் சாகசங்கள் நிகழத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement