‌நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வீடியோ பதிவை ஸ்டாலினுக்கு வழங்க உத்தரவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வீடியோ காட்சிப்பதிவை, மு.க.ஸ்டாலினுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற‌த்தில் வழக்கு தொடர்ந்திருக்கின்றனர்.

இந்த வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்த சட்டப்பேரவைச் செயலாளர் ஜமாலுதீன், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றதில் எந்த விதி மீறலும் இல்லை என தெரிவித்தார். ரகசிய வாக்கெடுப்பு முறையில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவேண்டும் என பேரவை விதிகளில் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.


Advertisement

அமளியில் ‌ஈடுபட்டதாலேயே திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதாக விளக்கமளித்துள்ள பே‌ரவைச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை பேரவைக்கு வரும் வழியில் காவலர்கள் அலைக்கழித்ததாக தம்மிடம் யாரும் புகார் தெரிவிக்கவில்லை எனவும் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சட்டப்பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டது தொடர்பான பேரவை செயலரின் பதில் மனு மீது விளக்கமளிக்க திமுகவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நம்பிக்கை வாக்கெடுப்பு காட்சி அடங்கிய, சிடியை ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement