கர்நாடகாவுக்கு சம்மட்டி அடி: ஜெயக்குமார் விமர்சனம்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காவிரி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு கர்நாடகாவுக்கு ஒரு சம்மட்டி அடி என புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 


Advertisement

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் ஏற்படுமா? என்று கேள்வி எழும்பியது. இதுதொடர்பாக பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவ், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் உச்சநீதிமன்ற உத்தரவில், கர்நாடக மாநில தேர்தல் நடத்தை விதிகள் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.

இந்நிலையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ள ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழக அதிகாரிகள், டெல்லியில் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற வேண்டி இருப்பதாகவும் கூறினார். மேலாண்மை வாரியம் விவகாரத்தை பொறுத்தவரை 29ஆம் தேதிக்கு பிறகு தான் எதையும் கூற முடியும் என்று கூறினார். மேலும் காவிரி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு கர்நாடகாவுக்கு ஒரு சம்மட்டி அடி எனவும் தெரிவித்தார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement