அழிந்துபோகும் கட்சிக்கு உயிர் கொடுக்கக் கூடாது - துரைமுருகன்

We-should-not-give-life-to-the-ADMK-party-which-going-to-exit-from-politics

தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பது கடினமான வேலையல்ல என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.


Advertisement

 திமுகவின்  மண்டல மாநாடு ஈரோட்டில் நடந்து வருகிறது. அதில் இரண்டாவது நாளான இன்று திமுக முதன்மைச்செயலாளர் துரைமுருகன் பேசினார். அப்போது தமிழகத்தில் ஆட்சியைக் கவிழ்ப்பது கடினமான வேலையல்ல ஆனால் திமுக அதை குறுக்கு வழியில்  செய்யாது என்று பேசினார் மேலும் ‘ ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது கருணாநிதி எங்களிடம் பேசினார் அப்போது அதிமுக இரண்டாக உடையப்போகிறது என்பதை அவர் முன்பே கூறினார். ஒருவேளை அதிமுக இரண்டாக உடைந்து ஆதரவு கோரும்பட்சத்தில் அதை திமுக புறகணிக்க வேண்டும் என்றும் பிறரை ஆதரித்து ஆட்சியமைத்தால் திமுகவுக்கு பின்னர் அழிவு ஏற்படும் என எச்சரித்தார். 
அழிந்துபோகும் ஒரு கட்சிக்கு நாம் உயிர் பிழைக்க வாய்ப்பு அளிக்கக்கூடாது என்றும் கருணாநிதியின் மகன் குறுக்கு வழியில் முதல்வர் ஆவதை அவர் விரும்பவில்லை என்றும் ஸ்டாலின் நேர் வழியில் முதல்வர் ஆவதைதான் அவர் விரும்புகின்றார்’ என்று துரைமுருகன் பேசினார்.   
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement