[X] Close >

ஊதிய உயர்வு வேண்டாம் பாஸ்: கனடா டாக்டர்கள் தாராளம்!

In-Canada--doctors-are-protesting-because-they-get-paid-too-much

'தேவைக்கு அதிகமாக வருமானம் கிடைப்பதால் எங்களுக்கு ஊதிய உயர்வு வேண்டாம்’ என்று கனடா நாட்டு டாக்டர்கள் கூறியுள்ளனர்.


Advertisement

கனடாவில் உள்ள கியூபெக் நகர அரசு டாக்டர்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு அவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நர்ஸ், அலுவலக ஊழியர்கள் என பலரும் மருத்துவமனையில் கடினமாக வேலை பார்க்கின்றனர். அதிக பணிச் சுமையை சந்திக்கும் அவர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுகிறது.


Advertisement

இந்நிலையில், 'சக ஊழியர்களான அவர்கள் கஷ்டப்படும்போது, நாங்கள் மட்டும் எப்படி ஊதிய உயர்வை ஏற்றுக் கொள்ள முடியும்? தேவைக்கு அதிகமாக வருமானம் கிடைப்பதால் ஊதிய உயர்வு எங்களுக்கு தேவையில்லை. இந்த பணத்தை, நாட்டின் சுகாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்துங்கள்' என்று டாக்டர்கள் அரசிடம் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி கியூபெக் சுகாதாரத் துறை அமைச்சர் காட்டன் பேரெட்டே கூறும்போது, ‘அவர்கள் அதிகமாக ஊதியம் வாங்குவதாக நினைத்தால் அதை எங்களுக்கு கொடுக்கலாம். அதை சரியான முறையில் பயன்படுத்துவோம்’ என்று தெரிவித்துள்ளார். 
 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close